தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் விநியோகிக்க ரேஷன் கடை ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தேவை இன்றி விடுமுறை எடுக்கக் கூடாது எனவும் மேலும் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே விடுமுறை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.