இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் “வாரிசு”. இப்படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சங்கீதா, ஷியாம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உட்பட பல பேர் பங்கேற்றனர்.
அப்போது விழாவில் ராஷ்மிகா ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் கில்லி படம் பார்த்து நடிகர் விஜய்யின் ரசிகர் ஆனதாக ராஷ்மிகா கூறினார். தற்போது ராஷ்மிகா தன் டுவிட்டர் பக்கத்தில் “தங்களை சந்தித்ததற்காக தேங்க் யூ. உங்களின் அன்பை உணர்கிறோம். இதனை திருப்பி உங்களுக்கு தருவதற்கான ஒரு வழி தான் பாடல்கள். விரைவில் உங்களை ஆன்லைன் வழியே சந்திக்கிறேன். உங்களுடன் நேரம் செலவழிப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.