Categories
மாநில செய்திகள்

தமிழகம் கொரோனா பரவலை தடுக்க தயார் நிலையில் இருக்கிறதா….? அமைச்சர் மா.சு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் தற்போது உருமாறிய பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடந்த 3 நாட்களாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதியாக வில்லை. தமிழகத்தில் தற்போது 1.75 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கும்‌ நிலையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.25 லட்சம் படுக்கை வசதிகள் இருக்கிறது. கடந்த வருடம் மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது தமிழகத்தில் 201 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. ஆனால் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருந்ததால் முதல்வர் ஸ்டாலின் ஆக்ஸிஜன் இருப்பை அதிகப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டார்.

இதனால் தற்போது 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு வேண்டிய மருந்துகள் கையிருப்பில் உள்ளது. அதன் பிறகு கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அதோடு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்கள். மேலும் தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதிகப்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார்.

Categories

Tech |