Categories
அரசியல்

ஓபிஎஸ், சசிக்கு NO…. எடப்பாடி தலைமையில் தேர்தல்… ADMK கூட்டத்தில் முடிவு!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  தலைமை கழக நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், கே பி. முனிசாமி போன்ற முக்கிய நிர்வாகிகள், கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  செய்தி தொடர்பாளர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அதிமுக உடைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அதிமுக தலைமை கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

இதிலிலும் ஒருமித்த கருத்தாக நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு  அனைவரும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனுடைய உள்ள அர்த்தமாக பார்க்க வேண்டியது. ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் சசிகலா ஆகியோரின் தலையீடு இல்லாமல் தற்போது இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அவர்களுடைய தலைமையிலேயே கூட்டணி அமைத்து கட்சி  இந்த தேர்தலை சந்திக்க தாயாகி உள்ளனர்.

Categories

Tech |