Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பேடி எம்: ஒரு நாளில் இவ்வளவு பணம் தான் அனுப்ப முடியுமா??…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) யூபிஐ வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்குரிய வரம்பை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும். இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல யூபிஐ செயலிகள் வாயிலாக எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என இப்பதிவில் காண்போம்.

அமேசான் பே

அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூபாய்.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. அதே நேரம் புதியதாக அமேசான் பே பயன்படுத்த துவங்கியவர்களுக்கு கணக்கை பதிவு செய்த 24 மணி நேரத்தில் ரூபாய்.5000 வரை மட்டுமே முதலில் ட்ரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

கூகுள் பே

கூகுள் பே செயலியில் நாளொன்றுக்கு நீங்கள் ரூபாய்.1 லட்சத்துக்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்ய இயலாது. அத்துடன் இவற்றில் ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முடியாது.

போன் பே

இந்த செயலியானது  உங்களை நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை ட்ரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. எனினும் இந்த வரம்பு அந்த நபர் வங்கி கணக்கை பொறுத்தது ஆகும்.

பேடி எம்

பேடி எம் செயலியில் நீங்கள் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை ட்ரான்ஸாக்ஷன் செய்யலாம். அத்துடன் இச்செயலி 1 மணி நேரத்தில் ரூபாய்.20,000 வரை ட்ரான்ஸாக்ஷன் செய்துகொள்ள உங்களை அனுமதிக்கிறது. அத்துடன் இதில் 1 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 5 தடவை மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 தடவை மட்டுமே ட்ரான்ஸாக்ஷன் செய்துகொள்ள முடியும்.

Categories

Tech |