பிரபல நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளது.
சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான படம் ‛ஒரு அடார் லவ்’. இத்திரைப்படம் பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவானது. மேலும் இந்தப்படம் தமிழிலும் வெளியானது. இத்திரைப்படத்தில் புருவ அழகி என ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவரை போலவே இந்த படத்தில் மற்றொரு நடிகை நடித்திருந்தார் நூரின் ஷெரீப்.
இந்த படத்தின் மூலம் இவருக்கு மலையாளத்தில் நடிக்க சில பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் நடிப்பில் பெர்முடா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இவருடன் நடித்த நடிகர் பாஹிம் என்பவரை திருமணம் செய்ய இருக்கின்றார். இவர்களின் நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. நண்பர்களாக பழகி வந்த இவர்கள் தற்போது திருமணத்தில் இணையுள்ளார்கள். இந்த நிலையில் தனது மகிழ்ச்சியை நூரின் ஷெரீப் வெளிப்படுத்தி இருக்கின்றார்.