Categories
மாநில செய்திகள்

மக்களே….!! இன்னும் நீங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா….? கவலை வேண்டாம்…. அவகாசம் நீடிப்பு….!!!!

மின் இணைப்புடன்  ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,” நமது மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்கள் அமைந்துள்ளது. மேலும் மக்கள்  முகாம்கள் மூலம்  தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

ஆனால் இதுவரை 1.16 லட்சம் பேர் மட்டும் தான் இணைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும்  90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளர்கள்  இணைக்க வேண்டும். இதனால் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் நீடிக்கப்படும்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |