தமிழகத்தில் ஜாதி, வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வகையில் தற்போது ஜாதி,வருவாய் மற்றும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல் உடனே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். மேலும் சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.