Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 43 போர் விமானம்… தைவானை நோக்கி அனுப்பிய பிரபல நாடு…!!!!!!

சீன விமான படையின் 43 விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா தனது ராணுவ நடவடிக்கை உரிமை கோரும் தீவுக்கு அருகே  தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. சீனா தைவானை தன்னுடைய சொந்த பகுதி எனக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவனை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி நடத்தியதாக கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான் சீனா பிராந்திய அமைதியை அழித்து தைவானின் மக்களை சிக்க வைக்க முயற்சிப்பதை இந்த பயிற்சிகள் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின் படி சமீபத்திய ஊடுருவலில் ஈடுபட்ட ஜெட் விமானங்கள் அதிகாரப்பூர்வமற்ற தைவான் ஜலசந்தியின் சராசரி எல்லைக்கோட்டை கடந்தது. மேலும் தைவான் அருகே 7 சீன கடற்படை கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் தைவான் அமைச்சகம் கூறியதாவது, சீன விமானங்களை எச்சரிக்க போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக  தெரிவித்துள்ளது.

Categories

Tech |