Categories
தேசிய செய்திகள்

என்ன ஆச்சு..! மருத்துவமனையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…. வழக்கமான பரிசோதனை தான்….. வெளியான தகவல்.!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் . இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ (ANI) இன் படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனை மற்றும் சிறிய வயிற்று தொற்றுக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 63 வயதான அவர் நண்பகலில் அனுமதிக்கப்பட்டார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகார்வப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 35வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திருமதி சீதாராமன் சனிக்கிழமை கலந்து கொண்டார்.நேற்று, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் திருமதி சீதாராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Categories

Tech |