Categories
தேசிய செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு நினைவிடம்…. 4,050 ஹெக்டேரில் நிலம் ஒதுக்கீடு…. மாநில அரசு தகவல்…!!!!

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவு இடம் அமைப்பதற்கு மத்தியபிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

கடந்த 1924-ம் வருடம் டிச,.25 ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த இவா், காங்கிரஸ் கட்சியை சாராமல் 5 வருட கால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா். மேலும் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தாா். அத்துடன் 10 முறை மக்களவை தோ்தலில் வெற்றி பெற்றவா்.

மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை இருந்துள்ள அவா், நாடாளுமன்றத்தில் 50 வருடங்களுக்கு மேல் உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவா். சென்ற 2015-ம் வருடம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பன்முகத் திறமை கொண்டவராக வாஜ்பாய் விளங்கினார். கடந்த 2018ம் ஆண்டு அவா் காலமானார். இந்த நிலையில் அவா் பிறந்த குவாலியா் நகரில் பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிரோல் பகுதியில் இந்த நினைவிடம் அமைய உள்ளதாக குவாலியா் நகராட்சி ஆணையா் தீபக்சிங் அறிவித்து உள்ளாா். மாவட்ட ஆட்சியா் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி வாஜ்பாய் நினைவு தினத்தில் அவருக்கு நினைவிடம் அமைப்பது தொடா்பான அறிவிப்பை மத்தியபிரதேச முதல்வா் சிவராஜ்சிங் சௌஹான் வெளியிட்டாா்.

Categories

Tech |