Categories
உலக செய்திகள்

தற்கொலை தடுப்பு அம்சம்… “இது முற்றிலும் பொய்யான செய்தி”…எலான் மஸ்க் பேச்சு…!!!!!

கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் வெறுப்பு, துன்புறுத்துதல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த குழு வழங்கி வந்தது. இந்நிலையில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனையடுத்து ஆபத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ட்விட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை எலான் உத்தரவின் பெயரில் அந்த நிறுவனம் நீக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த குழு சேவையை திறம்பட அமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என கருதினாலும் அதற்கான தகவல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் எலான்மஸக் கூறியதாவது, “‘தேர் இஸ் ஹெல்ப்’ என்னும் தற்கொலை தடுப்பு அம்சத்தை ரத்து செய்ய நான் உத்தரவிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |