இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக துனிஷா சர்மா இருந்து வந்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் ஆகியோருடன் நடித்து உள்ளார். இதையடுத்து இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு பிரபலமாகினார். தற்போது அலிபாபா தாஸ்தென் – இ -காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார். இதனிடையில் சூட்டிங் தளத்தில் துனிஷா சர்மா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் ஷஷென் முகமது கானை கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட துனிஷா சர்மா மற்றும் அவருடன் வெப்தொடரில் நடித்த நடிகர் ஷஷென் முகமது கான் இருவரும் காதலித்து வந்து உள்ளனர். அண்மையில் இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
அதன்பின் கடந்த 15 நாட்களுக்கு முன்பு துனிஷா சர்மாவும் – முகமது கானும் தங்களது காதலை முறித்துக் கொண்டனர். இதனால் மனமுடைந்த துனிஷா சூட்டிங் தளத்தில் நடிகர் முகமது கானின் மேக் அப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் ஷஷென் முகமது கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் ஷஷென் முகமது கான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.