Categories
சினிமா தமிழ் சினிமா

காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரபல நடிகை…? இந்த தகவல் உண்மையா..? வெளியான நியூஸ்…!!!

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார்.

இந்த திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம், “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை எனக் கூறியுள்ளார். அரசியலுக்கும் தனக்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லை” என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |