Categories
மாநில செய்திகள்

Wow!…. உலகத் தரம் வாய்ந்த எழும்பூர் ரயில்வே நிலையம்…. தெற்கு ரயில்வே போட்ட சூப்பர் பிளான்…. வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில்வே நிலையம் என்றால் அது எழும்பூர் தான். இது ஆங்கிலேயரின் கட்டிடக்கடைக்கு எடுத்துக்காட்டாக 144 வருடங்களாக கம்பீரமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது எழும்பூர் ரயில்வே நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக 734.91 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 36 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதன் பிறகு நிலப்பரப்பு கணக்கெடுப்பு, ஆழ்துளை சோதனை, அருகில் உள்ள ரயில்வே குடியிருப்புகளை அகற்றுதல், தரைத்தள அலுவலக கட்டுமானம் போன்ற பணிகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் எழும்பூர் ரயில்வே நிலையம் 3 வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் நவீன கட்டிடக்கலையின் அடையாளமாக, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சுமார் 1.35 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கிறது. மேலும் எழும்பூர் ரயில்வே நிலையம் இன்னும் 3 வருடங்களில் உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது தெரிய வருகிறது.

Categories

Tech |