Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2022-ல் இவ்வளவு சாலை விபத்துகளா….? அதிலும் விருதுநகரில் இத்தனையா…? அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, ஒருவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த நபரின் மொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 58,677 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1348 சாலை விபத்துகள் நடந்துள்ளது.

இந்நிலையில் இருசக்கர வாகனங்களினால் 45 சதவீத விபத்துகளும், 4 சக்கர வாகனங்களினால் 25 சதவீத விபத்தும் ஏற்படுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இரு சக்கர வாகனங்களால் தான் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உரிமம் வழங்கும்போது மண்டல அதிகாரிகள் உரிய ஆலோசனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதனையடுத்து சாலையில் செல்லும் ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் மட்டும் 16,727 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 10 விபத்துகள் நடந்தால் அந்த இடத்தை மத்திய அரசு கருப்பு புள்ளி என்று கணக்கிடும்.

இந்த கருப்பு புள்ளி இடங்கள் தமிழகத்தில் 1337 இருப்பதாகவும், அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 6 இடங்கள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தரமான சாலைகள் அமைக்கப்படுவதால் அதை பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக ஒரு சில விபத்துக்கள் நடைபெறுகிறது. மேலும் நல்ல சாலைகள் கூட சில சமயங்களில் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கூறினார்.

Categories

Tech |