Categories
தேசிய செய்திகள்

கோடியில் ஒருவருக்கு தான் அப்படி இருக்கும்!…. வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் குட்டா மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு வெகு நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பல முறை இந்த சோதனையை செய்த பின், வாலிபருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சிறு வயதிலிருந்தே அப்படி உள்ளது எனவும் மருத்துவர்கள் அவரிடம் கூறி உள்ளனர். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது வாலிபரின் உடலுக்குள் முழுஅளவில் வளர்ச்சியடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டுள்ளது.

அதாவது, கருப்பை, அதற்கான குழல் உள்ளிட்ட பல உறுப்புகளும் உடலின் உள்ளே வளர்ந்து இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் தாரா சங்கர்ஜா கூறியதாவது, கோடிக்கணக்கானோரில் ஒருவருக்கு இது போன்று ஏற்படும். அந்த வகையில் ஒரே நபருக்கு ஆண் மற்றும் பெண் உள்ளுறுப்புகள் காணப்படும். இதற்கிடையில் அறுவை சிகிச்சையில் அவரின் அனைத்து பெண் இனப்பெருக்க உறுப்புகளும் உடலிலிருந்து நீக்கப்பட்டது. தற்போது வாலிபர் நலமுடன் இருக்கிறார் என கூறியுள்ளார்.

Categories

Tech |