Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்லும் பாஜக….! தமிழகத்தில் எங்கே இருக்கிறது….? செந்தில் பாலாஜி விமர்சனம்…!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, 10,000 மதிப்பிலான காது கேளாதோருக்கான மெஷின் வழங்கப்படுவதாக கூறினார். ஆனால், அமேசானில் அதன் விலை 345மட்டும் என இருந்ததால் சர்ச்சையானது. இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் இன்று, 345/- மெஷின் 10,000. ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே என்றும், காதுகள் பாவமில்லையா என்றும்  ஏற்கனவே விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தமிழகத்தில் எங்குள்ளது? எத்தனை பேர் உள்ளனர்? எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன. என்பது தெரியாத கட்சி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ரூ.345 மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு ரூ.10,000 என பொய் சொல்லக்கூடியவர்கள் என்று பாஜகவை அவர் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |