ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர் அதிக வயிற்று வலியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இளைஞருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு அல்ட்ரா சவுண்ட் பலமுறை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை மற்றும் ஃபலோபியன் குழாய் போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருந்தது.
இந்த உறுப்புகளை மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு வாலிபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவர் தாரா சங்கர் ஜா கூறுகையில், மில்லியன் கணக்கானவர்களில் ஒருவருக்கு தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆண்களின் உடலில் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்வது ட்ரூ ஹெர்மாஃப்ரோட்டைட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உயிரியல் ரீதியாக இது பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.