Categories
மாநில செய்திகள்

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் புதிய விதி… “இனி யாரும் தப்ப முடியாது”..? கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு…!!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் பணி செய்யும் ஆசிரியர்கள் போதிய கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் எந்த நேரத்திலும் வீட்டுக்கு செல்வது அல்லது சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை பதிவுகள் ஜனவரி 1-ம் தேதி முதல் TNSED attendence செயலி மூலமாக பதிவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகை பதிவிற்கு மட்டும் தனியாக TNSED Attendence செயலி உருவாக்கப்பட்டுள்ளது”. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த சில மாதங்களாக இந்த செயலி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலியை பயன்படுத்த தொடங்குவதற்கு முன்பாக பழைய வருகை பதிவு செயலில் இருந்து வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய செயலியில் அனைத்து அரசு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கும் காலை, மாலை 2 நேரங்களில்  வருகை பதிவு செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இணைய சேவை இல்லாத நேரங்களில் வருகை பதிவு செல்போன்களில் பதிவு செய்யப்பட்டு அதன் பின் இணைய சேவை கிடைத்தவுடன் கல்வித்துறைக்கு அப்டேட் ஆகி விடுகிறது.

அதேபோல் முன்பு ஆசிரியர்களின் விடுப்பு விவரங்கள் கல்வி துறையை அடைய 2 முதல் 4 நாட்கள் ஆகி வந்த நிலையில் தற்போது புதிய செயலியால் அது உடனுக்குடன் தெரியும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலியின் மூலமாக விடுப்பிற்கான விண்ணப்பமும் செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலிக்குள்  நுழைய பணியாளர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பயனாளர் ஐ.டி மற்றும் ரகசிய எண்ணை புதிய செயலிக்கும்  பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் பள்ளி கல்வித்துறையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Categories

Tech |