Categories
அரசியல்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள்…. என்னென்ன தெரியுமா….?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search ஐ கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கொரோனா என்ற தொற்றுநோய் சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019 இல் தொடங்கியது. அதன்பிறகு 2020 ஆம் ஆண்டில் இந்த நோய் உலகம் முழுவதும் பரவி மக்களை படாதபாடு படுத்திவிட்டது.

இதனையடுத்து 2022 ஆம் ஆண்டில் குரங்கம்மை மிகவும் ஆபத்தான நோயாக மாறியது. இது பெரியம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். மனிதர்களில் குரங்கம்மை 1970 ஆம் ஆண்டு  கண்டறியப்பட்டது. ஆனால் 2022ல் இருந்து இந்த நோய் பல நாடுகளுக்கு வேகமாக பரவி ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு, தக்காளி காய்ச்சல் என்ற நோய் இந்தியாவிலும் அழிவை ஏற்படுத்தியது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இந்த நோய் அவ்வப்போது வந்து மக்களை அச்சறுத்தியது. இது உயிருக்கு ஆபத்தானவை ஆகும்.

அதன்பின் 2020 ஆம் ஆண்டில், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் மீண்டும் பரவத் தொடங்கியது. இது ஒரு தீவிர தொற்று ஆகும். இது பொதுவாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மார்ச் 4, 2022 அன்று, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக அறிவிக்கப்பட்டது.

X நோய் என்பது யாரும் அறிந்து கொள்ளாத இந்த ஆண்டின் நோயாகும். உலக சுகாதார அமைப்பு கூட இந்த நோய்க்கு பயந்தது. உலக சுகாதார நிறுவன கூற்றுப்படி, X வைரஸ் எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

இந்த ஆண்டு மீண்டும் தட்டம்மை நோய் அதிகரித்தது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் இளம் குழந்தைகளுக்கு தட்டம்மை வேகமாக பரவியது. இந்தியாவின் சுகாதார அமைப்பு இந்த ஆண்டு அதிகரித்த நோய்களில் தட்டம்மையும் ஒன்று என்று கூறியிருந்தது.

 

Categories

Tech |