Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் வீட்டை எளிமையான முறையில் அலங்கரிக்கணுமா….? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், குடில் அமைத்தல், வண்ண விளக்குகள் என பலவிதமாக வீட்டை அலங்கரிப்பார்கள். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எளிய முறையில் வீட்டை அலங்கரிக்கும் சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். அதன்படி முதலில் வீட்டில் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வைக்கலாம்.‌ இதற்காக நீங்கள் மரப்பலகைகளை பயன்படுத்தலாம். சிறிய அளவிலான மரபலகைகளை கடையிலிருந்து வாங்கி அதை கிறிஸ்துமஸ் மரம் போன்ற அடுக்கி வைக்கலாம்.

அதன் பிறகு உங்களுக்கு பிடித்த ஆபரணங்களால் அந்த கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் நட்சத்திர வடிவிலான தேவதை விளக்குகள், கைகளால் செய்யப்பட்ட சில ஆபரணங்கள், ஐஸ்கிரீம் குச்சிகள் போன்றவர்களை பயன்படுத்தலாம். அதோடு சில பிளாஸ்டிக் பால்களில் வண்ண பேப்பர்களை பசை பயன்படுத்தி ஒட்டி அதையும் கிறிஸ்மஸ் மரத்தில் தொங்கவிடலாம். இல்லையெனில் நீங்கள் சில அட்டைப்பெட்டிகளை உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் அல்லது வேறு ஏதாவது வடிவில் வெட்டி எடுத்து அதில் வண்ண பேப்பர்களை ஒட்டி அதையும் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒட்டி வைக்கலாம்.

தேவைப்பட்டால் கூடுதலாக வண்ணமயமான விளக்குகளையும் கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடலாம். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு சுவையான விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது கேக் தான். எனவே வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மிகவும் சாதாரணமான முறையில் விருந்து கொடுக்க வேண்டும் என்றால் கேக் கூட கொடுக்கலாம். அதன்பிறகு மெழுகுவர்த்திகளில் வண்ணங்கள் பூசி வீட்டில் ஒளிரவிட்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.‌ மேலும் மிகவும் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிப்பதற்கு இது போன்ற எளிய வழிமுறைகளை கையாளலாம்.

Categories

Tech |