போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்ஸாபூர் பகுதியில் மெக்கானிக்கான ஷாகித் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சானியா மிர்ஸா என்ற மகள் உள்ளார். இவர் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும் இது குறித்து அவரது தந்தை கூறியதாவது,” முதல் பெண் பைலட் அவ்னி சதுர் வேதி போல் வரவேண்டும் என்பதே எனது மகளின் லட்சியமாக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.