ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 10 வகுப்பு மதிப்பெண்ணை உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எனவே ஜேஇஇ தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.