Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு…. வருமானவரித்துறை ஊழியர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். தற்காலிக ஊழியரான அந்த பெண் கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 5 வருடங்களாக வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

அங்கு மூத்த வரி உதவியாளராக வேலை பார்க்கும் ரேக்ஸ் கேப்ரியேல் என்பவர் எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து அவரது ஆசைக்கு இணங்குமாறு செல்போனில் அடிக்கடி பேசி தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் அவர் மீது புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 14-ஆம் தேதி தரையில் கொட்டி இருக்கும் தண்ணீரை துடைக்க வருமாறு ரெக்ஸ் என்னை அழைத்தார். இதனால் அங்கு சென்று தண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தபோது பின்புறத்தில் இருந்து அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதால் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றேன்.

அவரது தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலைக்கு கூட முயன்றேன். ஆனால் எனது இரண்டு மகள்களுக்காக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் வருமானவரி மூத்த உதவியாளரான ரெக்ஸ் கேபிரியேலை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |