வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதி-திருமலையில் தங்கும் இடம் போன்றவற்றை முன்பதிவு செய்யவேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனையாகவுள்ள நிலையில், அதை ஆன்லைன் வாயிலாக வாங்கும் வழிமுறைகள் குறித்து காணலாம். அத்துடன் திருமலையில் தங்கும் இடத்தை முன்பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம். முதலில் https://tirupatibalaji.ap.gov.in/ திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்துக்கு செல்ல வேண்டும்.
அதன்பின் உங்களது மொபைல் எண்ணையும், Captcha Code விவரங்களை நிரப்ப வேண்டும். அடுத்ததாக “Generate OTP” கிளிக் செய்தால், உங்களது மொபைலுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு Login-ஐ கிளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும். இதற்கிடையில் ஒரு முன் பதிவுக்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையானது தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் இருக்கும். எடுத்துக்காட்டாக திருப்பதி இருப்பிடத்துக்கு குறைந்தபட்சம் 2 மற்றும் அதிகபட்சம் 4 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக நீங்கள் தரிசன டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து இருந்தால் திருமலையில் கூடுதல் அறைகளை பெறுங்கள். பக்தர்கள் தங்கு இடத்தை முன்பதிவு செய்யலாம். குறைந்தபட்சம் ஒருநாள் முன்கூட்டி மற்றும் அதிகபட்சம் 120 நாட்கள் ஆகும். பல்வேறு தங்குமிடங்களை தேர்வு செய்ய இயலாது. TTD தரிசனத்துக்கு நீங்கள் விரும்பக்கூடிய தேதிகளை தேர்ந்தெடுக்கவும். ஸ்லாட்டுகள் இருப்பின் பச்சை நிறமாகவும், வேகமாக நிரம்பினால் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இதனிடையில் கோட்டாக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதனை நீலம்நிற இடங்கள் குறிப்பிடுகிறது.
சிவப்பு நிற இடங்கள் ஒதுக்கீடுகள் நிரம்பி இருப்பதைக் குறிக்கிறது. தேதிகளை தேர்ந்தெடுத்த பின் விலைகளுடன் கிடைக்கும் அறைகள் தோன்றும். தேதியை தேர்ந்தெடுத்த பின் உங்களுக்கு விருப்பமான நேர ஸ்லாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். மொத்த பக்தர்களின் எண்ணிக்கையை உள்ளிட வேண்டும். பிறகு பக்தர்களின் பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் மற்றும் முகவரி ஆகிய விபரங்களை உள்ளிட வேண்டும். இதன் வாயிலாக தரிசன டிக்கெட் மட்டுமின்றி திருப்பதி, திருமலையில் தங்குமிடத்தையும் முன் பதிவு செய்துகொள்ளலாம்.