சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில் சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் தேதி சென்னை சென்ட்ரல் -கோவை சகாப்தி எக்ஸ்பிரஸ், மற்றும் கோவை- சென்னை சென்ட்ரல் சகாப்தி எக்ஸ்பிரஸ் போன்றவையும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில் சேலம் அரக்கோணம் ரயில் வருகிற டிசம்பர் 26, 27 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனையடுத்து காட்பாடி- அரக்கோணம் இடையே ஒரு பகுதி போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் அரக்கோணம் – சேலம் ரயில் ரயில் காட்பாடியில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் – காட்பாடி இடையே ஒரு பகுதி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.