திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர்.
ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு நிறைய பேருக்கு தகுதி வராது, ஒரு சில பேருக்கு மட்டுமே அது பொருத்தமாக இருக்கும். அண்ணன் ஆவடி நாசர் அவர்களுக்கு அது மிக மிக பொருத்தமான ஒரு விஷயம். காரணம் ? அண்ணன் அவர்களுக்கு ஆவடி என்பது வெறும் அவருடைய ஊர் மட்டுமல்ல, அவர் உணர்வும் முழுவதும் ஆவடி தான். அவர்தான் ஆவடியினுடைய மண்ணின் மைந்தர்.
நம்முடைய நாசர் அண்ணன் அவர்களை நீங்கள் வெற்றி பெற வைத்து, சட்டமன்ற உறுப்பினராக… அனுப்பி வைத்தீர்கள், தலைவர் அவர்கள் அண்ணன் நாசர் அவர்களை அமைச்சராக அழகு பார்த்து… முக்கியமான துறை… பால்வளத்துறை அமைச்சராக… முக்கியமான துறையில் வெகு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இளைஞர் அணியில் இருந்து நீங்கள் வந்தது எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி. நீங்கள் அத்தனை பேருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் மீது ஒரு தொண்டன் வைத்திருக்கும் நம்பிக்கை, ஒரு தொண்டர் மீது தலைவர் காட்டும் நம்பிக்கைக்கு உதாரணமாக தான் நம்முடைய நாசர் அண்ணன் அவர்களும், தலைவர் அவர்களும். தலைவர் சொல்லை மீறாதவர், இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சிக்கு என்னிடத்திலே தேதி வாங்கிய பிறகு.. தலைவர் அவரை தொடர்பு கொண்டு… பல கட்டளைகளை இட்டிருந்தார். நானும் பல கட்டளைகளை இட்டிருந்தேன். சொன்ன வாக்கை காப்பாற்றி இருக்கிறார்.
ஆனால் வருகின்ற வழியில் கழக நிகழ்ச்சி இரண்டு இடங்களில் கழகக் கொடியேற்றி, ஏதோ நிகழ்ச்சிக்கு வந்தோம் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம் என்று இல்லாமல், அது பொது மக்களுக்கும் – கழகத்தினருக்கும் உபயோகமாக இருக்க வேண்டும் என்று பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் கிட்டத்தட்ட 100 மகளிருக்கு இலவச தையல் மிஷின்கள், விளையாட்டு துறை அமைச்சராக நான் வந்ததினால் ஒரு 50 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குகின்ற நிகழ்ச்சி… அதை எல்லாம் சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார் நம்முடைய ஆவடி நாசர் அண்ணண் அவர்கள் என புகழ்ந்து தள்ளினார்.