Categories
சினிமா தமிழ் சினிமா

“பொண்டாட்டிய விரட்டி விட்டுட்டு ஊர் சுத்திட்டு இருக்கான்!… இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே!…. அர்னவ்வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவ், அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருடன்  ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். இதையடுத்து பெயிலில் ரிலீஸாகி இருக்கும் அர்னவ், செல்லம்மா சீரியலில் ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் செல்லம்மா சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசி உள்ளனர்.

அப்போது அந்த பெண்கள் “நீங்க எப்போ செல்லம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவள் குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?.. அந்த மேகாவ துரத்தி விட்ருங்க. அப்போதான் சீரியல் நல்லா இருக்கும்” என்று கூறுகின்றனர். இதற்கிடையில் அர்னவின் நிஜ வாழ்க்கையும், அவர் நடிக்கும் சீரியலின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதை சுட்டிக்காட்டி “இவனே பொண்டாட்டிய விரட்டி விட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்கான். இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே இந்த அப்பாவி பெண்கள்” என அர்னவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Categories

Tech |