2022 -ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகர தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வருகிற 2023 -ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளது.
பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.
*தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுசுகி, டி.வி.எஸ், ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் சுசுகி பர்க்மென் ஸ்ட்ரீட் ஏற்கனவே தனது யூனிக்கான ஸ்டைலால் இந்திய வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சுசுகி நிறுவனம் தற்போது இந்த மாடலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் தற்போது இருக்கும் பெட்ரோல் ஸ்கூட்டரை போலவே ஸ்டைல் அண்ட் லுக்கில் மாற்றமில்லாமல் இந்த பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாகிறது. 4kw திறன் கொண்ட என்ஜின் உடன் தயாராக உள்ள இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்து கொள்ளலாம்.
டிவிஎஸ் கிரியோன்.
*ஏற்கனவே ஐ க்யூப் என்னும் பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வெற்றி கண்ட டி.வி.எஸ் நிறுவனம் தற்போது இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 -ஆம் வருடம் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2023 ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த புதிய மாடல் வெளியாகலாம். ஸ்போர்ட்ஸ் மாடலில் உருவாகும் கிரியோன் 2018 -ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சார்ஜில் 80 கிலோ மீட்டர் தூரம் வரை கிரியோன் 5.1 வினாடிகளில் பூஜ்ஜியம் கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டுவிடும் திறன் கொண்டது என கூறுகிறது டி.வி.எஸ் நிறுவனம்.
ஆக்டிவா எலக்ட்ரிக்.
*இந்த ஆக்டிவா எலக்ட்ரிக் ஏற்கனவே பெட்ரோல் வேரியண்டல் சக்கை போடும் ஸ்கூட்டர். ஹோண்டா தயாரிப்பில் இந்திய ஸ்கூட்டர்கள் கெத்துக்காட்டி வருகிறது ஆக்டிவா. அந்த ஆக்டிவா எலக்ட்ரிக் வேரியண்டிலும் கலக்க தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் ஆக்டிவா 6g யின் மாடலை ஒத்திருக்கும் விதமாக எலக்ட்ரிக் ஆக்டிவா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சார்ஜில் 95 கிலோ மீட்டர் செல்லும் திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த எலக்ட்ரிக் ஆக்டிவா வரவுள்ளது.
யமாஹா.
*யமாஹா நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் முக்கியமான நிறுவனம் ஆகும். இதுவரை யமாஹா நிறுவனம் தான் எலக்ட்ரிக் பக்கம் வரவில்லை. தற்போது அந்த குறையும் தீர்ந்து விடுகிறது. 2023 -ஆம் ஆண்டு யமாஹா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பில் தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலையில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ ஏஇ-8
*ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்து வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது ஹீரோ எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம். இந்நிலையில் அதன் அடுத்த மாடல் அடுத்த வருடம் அறிமுகமாக தயாராகியுள்ளது. முதல் முறை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களை குறி வைத்து ஹீரோ நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வெளியிட உள்ளது. அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் விதமாக இந்த ஹீரோ ஏஇ8 வெளியாக உள்ளது. மேலும் இதில் முக்கிய அப்டேட் ஒன்று உள்ளது. அதாவது இந்தியாவில் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்ற பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரும் எலக்ட்ரிக் வேரியண்டில் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியாவின் ஐகானிக் ஸ்கூட்டரான சேட்டக் வரவை தான் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.