தேனி மாவட்டம் குமுளி மலைப்பகுதியில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடிந்து விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த காயத்துடன் குழந்தை உட்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராட்சச கிரேன் வரவழைக்கப்பட்ட விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BIG BREAKING: கோர விபத்து 8 தமிழக ஐயப்ப பக்தர்கள் பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!
