சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேறுமாறு கூறிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றப்பட்டுள்ளார். முதலமைச்சர் பேசிய போது குறுக்கிட்டதால் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது நான் குறுக்கிடுவதில்லை.
பேரவையில் நாம் பேசும் போது குறுக்கிடுவது தவறு. ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்தது அதிமுக என கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்டின் நடந்து கொண்டது போன்ற சம்பவம் தொடராமல் பார்த்து கொள்ள வேண்டும் என திமுகவினருக்கு தனபால் அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து திமுக எம்எல்ஏ ஆஸ்டினை வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன்வலியுறுத்தினார் அதற்கு தொடர்ந்து பேசியதால் ஆஸ்டின் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
மேலும் திமுக எம்எல்ஏ ஆஸ்டினை வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இறுதி எச்சரிக்கையுடன் முடித்து கொள்ள வேண்டும் என ஸ்டாலினும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன் கோரிக்கையை ஏற்று ஆஸ்டினுக்கு எதிரான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றப்பட்டுவதான உத்தரவை நிறுத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.