சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது போன்று தமிழக ரேஷன் கடைகளிலும் தேர்வு மூலமாக பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அனிதா என்பவர் எந்த தகுதியும் இல்லாமல் பணி நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது ரூபாய் 5 லட்சம் பணம் கொடுத்து வேலையை பெற்றதாக கூறினார்.
நாங்கள் இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அனிதா என்ற பெயரில் எந்த ஒரு பணியாளரும் வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டனர். எனவே நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபரை தேர்வு செய்ய தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் எந்த தகுதியும் இல்லாமல் பணி நியமனம் பெற்ற அனிதாவை உடனே பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.