Categories
அரசியல்

மாலை போட்டு கொண்டு கிறித்துமஸ் விழா இது தான் சமூக நீதி Udhayanithi Stalin

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று….  எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்…

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அவர் ரம்ஜானுக்கும் இதைவிட ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தினர். அவர் பார்ப்பதற்கு தான் இப்போதும் மாலையும்,  கழுத்தோடு இருப்பார். ஆனால் இதுதான் சமூக நீதி ஆட்சி, இதுதான் பெரியார் கற்றுக் கொடுத்தது, பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்தது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கற்றுக் கொடுத்தது, இனமான பேராசிரியர் அவர்கள் கற்றுக் கொடுத்தது, அதைத்தான் நம்முடைய தலைவர் அவர்கள் திராவிட மாடல் ஆட்சி என்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் நானும் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இன்றைக்கு எல்லா சங்கிகளுக்கும் எரியும், சேகர்பாபு வந்து அல்லேலூயா என்கிறார், உதயநிதி போய் நானும் கிறிஸ்துவன் என்கிறார், நானும் சொல்வேன் நான் இஸ்லாமியர் என்று சொல்வேன். நான் படித்தது இதே  டான்போஸ்கோ பள்ளியில் தான். எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் படித்தேன், அதன் பிறகு பட்டம் பெற்றது லைலா கல்லூரியில், நான் காதலித்து மணந்தது ஒரு கிறிஸ்தவ பெண். எனவே அந்த உரிமையோடு இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இங்கே பேசிய சேகர்பாபு அண்ணன் அவர்கள் நான் பலமுறை அழைத்த போதெல்லாம்  இங்கே வந்திருக்கிறார் என்று  சொன்னார். எனக்கே சில சமயம் சந்தேகம் வந்துவிடும். நான் சேப்பாக்கம் –  திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரா ? அல்லது துறைமுகம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினரா ? என்று,  அந்த அளவிற்கு கணக்கு இல்லாத அளவிற்கு நான் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த துறைமுகம் பகுதிக்கு….  இன்னும் சொல்லப்போனால் என்னுடைய சேப்பாக்கம் தொகுதியை விட அதிகமான நிகழ்ச்சி  இந்த துறைமுகம் பகுதிக்கு தான் வந்திருக்கிறேன். நான் வருகின்ற ஒரு ஒரு முறையும் நீங்கள் கொடுக்கின்ற அந்த வரவேற்பு, எழுச்சி, அந்த சிரித்த முகத்தோடு என்னை வரவேற்கின்ற அன்பு, என்னோடு தொகுதியில் கூட  உடனே சொல்லிவிடுவார்கள்… நான் தொகுதி மாறப் போகிறேன் என்று. பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தினம்… கடந்து மூன்று. நான்கு நாட்களாக நான்தான் அவர்களுடைய பசிக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறேன், நன்றி வாழ்த்தியர்களுக்கு நன்றி, என் மீது அக்கறை கொண்டு….  அது எப்படி உதயநிதியை நீங்கள் அமைச்சராக்கலாம் ? என்று, திடீரென்று நம்முடைய கழகத்தின் மீதும்,  நம்முடைய அரசின் மீதும் திடீர் பாசம் வந்திருக்கிறது நிறைய பேருக்கு, அந்த பாசத்திற்கு நன்றி.

நான் இளைஞரணி செயலாளராக இந்த துறைமுகம் பகுதிக்கு வந்திருக்கிறேன். இதே திடலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராக நிறைய நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.  நிறைய நலத்திட்ட உதவிகள். இப்போது முதன்முதலாக அமைச்சராக பொறுப்பேற்று உங்களுடைய அன்பு எல்லாம் பெற வந்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் எனக்கு மட்டும் கூடுதல் பொறுப்பு கொடுக்கவில்லை, அண்ணன் சேகரு பாபு அவர்களுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை சொல்கிறேன். இந்து சமய அறநிலைத்துறையினுடைய அமைச்சர்,  சி.எம்.டி.ஏ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறையையும் தலைவர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.  அதற்கு நீங்கள் அத்தனை பேரும் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.

தலைவர் அவர்கள் என்னை அழைத்து,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அதை ஒப்படைக்கும் போது மிகப்பெரிய பொறுப்பு, அதை ஏற்றுக்கொள்ளும் போது ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அண்ணன் சேகர்பாபு அவர்கள் போல என்னை வழிநடத்துவதற்கு பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதினால்,  அந்த தைரியத்தில் தான் நான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இப்போது கூட துறைமுகம் பகுதிக்கு வந்து,  இந்த நிகழ்ச்சி முடிந்து 6 மணியளவில் விமான நிலையத்திற்கு சென்று…  என்னுடைய துறைக்கு ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், கோவை மாவட்டத்திற்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறேன். எனவே இங்கே வந்து உங்களுடைய ஆசியை பெற்று, உங்களுடைய வாழ்த்துக்களை பெற்று, அன்பை பெற்று தான் நான் என்னுடைய முதல் சுற்று பயணத்தை துவங்க இருக்கிறேன்.

அதைப்போல் இங்கே வரவேற்புரையாற்றிய திரு ஜான்சன் அவர்கள் இங்கே உரையாற்றும் போது,  அருமையாக ஒரு சிறிய கதை ஒன்றை சொன்னார்கள், அந்த கதைப்படி தந்தை மகன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி வேலை செய்யவில்லை, தந்தை அந்த தொலைக்காட்சியை பிரித்து பார்க்கிறார்.  அதிலே பின்னாடி வந்து கொஞ்சம் ரொட்டி துண்டுகள் இருந்தது, தந்தை கேட்கிறார்…  எதற்காக அந்த ரோட்டி துண்டு இங்கே வைத்தாய் என்று, அப்போது மகன் சொல்கிறார்…  தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் ஒரு குடும்பம் மிக வறுமையான  சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக அந்த ரொட்டு துண்டுகளை நான் அங்கே வைத்தேன் என்று, அந்த மகன் கூறுகிறான். ஒரு அருமையான நல்ல அர்த்தத்தோடு கூடிய அந்த மகனுடைய இரக்க குணத்தை கட்ட கூடிய ஒரு அருமையான கதை…

அதிலே நான் ஒரு சிறு திருத்தம் அல்ல. எங்களுடைய சேகர பாபு அண்ணனை அந்த மகனோடு ஒப்பிட்டு சொன்னால்… எங்கள் சேகர்பாபு அண்ணன் தொலைக்காட்சி பெட்டியில் எல்லாம் வைக்க மாட்டார், ஒவ்வொருவருடைய வீட்டிலும் கொண்டு போய் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் வைத்து விட்டு வந்துருவார். சேகர்பாபு அவர்கள் தொலைக்காட்சி பெட்டியில் வைக்க மாட்டார், அதற்கு முக்கிய காரணம் எங்களுடைய கலைஞர் இருக்கிறாரே,  ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியை கொண்டு போய் வைத்தார்.

Categories

Tech |