மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு மாதா மாதம் சரியான முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தங்களுடைய ஆயுட்காலச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி கொடுக்கப்பட்ட காலக்கடுவிற்குள் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் ஓய்வூதிய தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டிற்கான ஆயுட்கால சான்றிதழை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வரும்போது, ஓய்வூதிய உத்தரவு ஆணை, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விரவங்களுக்கு ஓய்வூதியர்கள் 044-2345 5801 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.