பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாளை முதல் அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மெண்ட்களை வழங்கலாம்.
இந்நிலையில் 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு 16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் தற்போது நடைபெற்றது. இந்த பொது தேர்வு மிகவும் கவனத்துடன் நடத்தப்பட்டது. மேலும் இதன் விடைத்தாள்களை விரிவாக திருத்தி வழங்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வுக்கான விடுமுறை வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.