Categories
மாநில செய்திகள்

“2023ஆம் ஆண்டு தேர்வுகள்” எழுந்த சர்ச்சை…. TNPSC விளக்கம்..!!!!

2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு சமீபத்தில்  வெளியிடப்பட்டது. 2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பாக ஓராண்டில் 10 தேர்வுகள் மூலம் 1.754 பணியிடங்கள் மட்டுமே TNPSC நிரப்ப உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை முதல்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணை தான் என TNPSC விளக்கமளித்துள்ளது. கூடுதல் பணியிடங்களுக்கான விவரங்கள் பெறப்பட்டு அட்டவணை சேர்த்து வெளியிடப்படும் என்று

தெரிவித்துள்ளது.

Categories

Tech |