Categories
தேசிய செய்திகள்

என்னமா இப்படி பண்றீங்க!… பியூட்டி பார்லர் போக காசு கொடுக்கலன்னு டைவஸா?…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் சொன்னது என்ன?….!!!!

உத்தரபிரதேசம் அலிகார் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமித் என்பவருக்கும் சென்ற 2015ம் வருடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சென்ற 3 வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இரண்டு பேரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவர் அமித்திடமிருந்து விவாகரத்து கோரி அந்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் நீதிமன்ற விசாரணையில், பியூட்டி பார்லர் செல்லவும், வீட்டு செலவுகளுக்கு தேவையான பணம் தராததாலும் அமித்தை விவாகரத்து செய்வதாக பெண் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கணவன்-மனைவி இரண்டு பேரையும் கவுன்சிலிங் செல்ல அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

Categories

Tech |