Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

பள்ளிக்  கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5-ஆம்  தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

இந்நிலையில் நமது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 9-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இந்த மாதம் 16-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கியது. இது  10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் கவனமாக நடத்தப்பட்டது. மேலும் இந்த  தேர்வுக்கான விடைத்தாள்களை விரைவில் திருத்தி வழங்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Categories

Tech |