Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒல்லியா இருந்தாலும் பிரச்சனை தான், குண்டா இருந்தாலும் பிரச்சனை தான்”….. உருவகேலிக்கு நயன்தாரா பதிலடி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ‌ படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகை நயன்தாரா தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில நயன்தாரா தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கனெக்ட் படத்தில் நயன்தாரா சோகமாக இருந்த சீனை ஒருவர் சோகமான ஸ்மைலியுடன் இணையதளத்தில்  பகிர்ந்ததற்கு நயன்தாரா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, சோகமான சீனில் சோகமாக தான் இருக்க முடியும். சோகமான சீனில் எப்படி பளிச்சென்று இருக்க முடியும்.

அவர்களுக்கு ஒல்லியாக இருந்தாலும் பிரச்சனை தான். குண்டாக இருந்தாலும் பிரச்சனை தான். அது எப்போதுமே இருக்க கூடிய ஒன்றுதான். ஆனால் நான் அதை பெரிதளவில் எடுத்துக் கொள்வது இல்லை. படத்தில் என்னுடைய இயக்குனர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அதற்கு தகுந்தவாறு தான் நான் என்னுடைய உடல் அமைப்பினை மாற்றிக் கொள்ள முடியும். நான் கனெக்ட் பாடத்தில் 15 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளதால் தான் என்னுடைய தோற்றம் அப்படி இருக்கிறது. என்னை பிடிக்காதவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். மேலும் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |