Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த இஸ்லாமியர்கள் போராட்டம்….. ஒத்துழையாமை இயக்கம் என்று எச்சரிக்கை …!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த இஸ்லாமியர்கள் போராட்ட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது ,குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் தொடர்போராட்டம் தற்போது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இதனை தேசிய பேரிடர் என்று அறிவித்து இருப்பதனாலும் நாட்டு மக்களின் உயிரையும் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நடைபெற்று வரக்கூடிய அனைத்து ஜாகீன்பாக் தொடர்ந்து போராட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு பொதுமக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

நாட்டு மக்களின் மீது அக்கறையும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. ஆயினும் வருங்காலத்தில் தமிழகத்தில் NPRயை நடைமுறைப்படுத்த அரசு முயற்சித்தால் நாம் தொடர்ந்து போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதை கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது. தமிழகத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முயற்சித்தால் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்கள்.

Categories

Tech |