Categories
சினிமா

“காதலுக்காக அடி வாங்கிய ராமராஜன்”…. இதுதான் பிரிவுக்கு காரணம்…. விவாகரத்து குறித்து மனம் திறந்த நளினி….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடித்த ராணுவ வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நளினி. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ராமராஜன் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நளினி மீது ஒருதலை காதலில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நளினியின் குடும்பத்திற்கு தெரிய வரவே ராமராஜனை பிடித்து அடித்துள்ளனர். இதனால் ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நளினி சென்னைக்கு வந்து ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு நளினி மற்றும் ராமராஜன் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகை நளினி பேட்டி ஒன்றில் ராமராஜனை விவாகரத்து செய்தது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன பிறகு என்னுடைய அம்மா ஜோசியம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அப்போது ஜோசியக்காரர் திருமணமான சில வருடங்களில் நாங்கள் இருவரும் பிரிந்து விடுவோம் என்று கூறினார். இதேபோன்று பலரும் பேசினார்கள். இதனால் நாங்கள் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக சந்தோஷமாக பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் நளினியின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |