அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியை இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பாக கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கப் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பின்பே தேர்தலை நடத்த வேண்டிய சூழல் 2018 தேர்வானவர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Categories
2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்… தமிழக அரசு முடிவு…. வெளியான அறிவிப்பு…!!!!
