கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும் பாரன் கில்லா துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று எரிபொருள் டேங்க் வெடித்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். அருகே இருக்கும் எரிபொருள் டேங்குகளில் தீ பரவக்கூடிய ஆபத்து இருந்தது. மூன்று தினங்களில் நெருப்பை கட்டுப்படுத்த முடியும் என்று தீயணைப்பு படையினர் கூறியிருந்தார்கள். இந்நிலையில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேவியர் சோலனோ என்ற வீரர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து, பரிதாபமாக பலியானார்.