Categories
தேசிய செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கும்- பயணிக்கும் இடையே சண்டை விவகாரம்…. என் ஆதரவு உங்களுக்குத்தான்?…. நடிகை குஷ்பு டுவிட்….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார்.

அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக கூறுகிறார். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி, இச்சம்பவம் பற்றி ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் விமான பணி பெண்ணுக்கு ஆதரவளிப்பதாக நடிகை குஷ்பு டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கண்ணியம், மரியாதைக்காக துணை நிற்பேன் என குஷ்பு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |