சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் தபால் நிலையத்தில் வேலை பார்த்தார். அப்போது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதிய பணத்தை தானே எடுத்து கொண்டு மோசடி செய்ததால் ரவி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தபால் துறையில் வேலை பார்ப்பது போல சுற்றி வந்த ரவி வேலை தேடி வருபவர்களை குறி வைத்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று ரவியை கைது செய்தனர். அவரால் ஏமாற்றப்பட்ட 15-க்கும் மேற்பட்டோர் தாம்பரம் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மோசடி செய்த பணத்தை சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், தன்னிடம் தற்போது எந்த பணமும் இல்லை எனவும் ரவி கூறியுள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.