தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் 14.06% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 1,53,233 பேர் எழுதிய தாள்-1 ல் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்றோர் இடைநிலை ஆசிரியர்களாக 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதியானவர்கள் ஆவார். ஆனால் குறைவான எண்ணிக்கையில் தேர்ச்சி விகிதம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.