Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகவரி கேட்பது போல் நடித்து…. சங்கிலி பறித்த மர்ம நபர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு சென்று முகவரி கேட்பது போல் நடித்து வயதான பெண்களிடம் சிலர் தங்க சங்கிலியை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது முகவரி கேட்பது போல் மற்றும் சிலிண்டர் சர்வீஸ் செய்வது போல் நடித்து வீடுகளில் தனியாக இருக்கும் வயதான பெண்களை குறி வைத்து சங்கிலி பறித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் குலாப் பாஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கெட்டுபோன் தங்க நகை இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |