Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு: அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தினால் அரசுக்கு 2356 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய இருக்கிறார்கள்.

Categories

Tech |