Categories
மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா: தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நினையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |